25 June 2018

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே

கன்:73

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                             பல்லவி

 

          அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே

            தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெபத்தாலே

 

                             அனுபல்லவி

 

                        இதுகாறும் காத்த தந்தை நீரே;

                        இனிமேலும் காத்தருள் செய்வீரே,

                        பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,

                        பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே! - அதி

 

                             சரணங்கள்

 

1.         போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! - எப்

            போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா

            ஈனப்பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா?

            எனக்கான ஈசனே! வான ராசனே!

            இந்த நாளிலும் ஒரு பந்த மில்லாமல் காரும் நீதா! - அதி

 

2.         பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும்போது - தப்

            பாது நின் கிருபை தாங்கிடவேணும் அப்போது

            விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?

            விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட

            விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? - அதி

 

3.         நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே! - தீ

            நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!

            பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே!

            புகழான நாதனே! வேத போதனே!

            பூரணமாய் உனைப் போற்றுவேன், தினம்தினம் மெய்யே - அதி

 

 

- சா. பரமானந்தம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...