27 June 2018

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே


பல்லவி

                   இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
                        வாசஞ் செய்கிறாரே!

சரணங்கள்

1.         தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
            தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
            தேவன் தாம் அவர்கள் - தேவனாயிருந்தே
            கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே!                - இதோ

2.         தேவ ஆலயமும் அவரே
            தூய ஒளி விளக்கும் அவரே
            ஜீவனாலே தம் ஜனங்களின் - தாகம் தீர்க்கும்
            சுத்த ஜீவ நதியும் அவரே!                                 - இதோ

3.         மகிமை நிறை பூரணமே
            மகா பரிசுத்த ஸ்தல மதுவே
            என்றும் துதியுடனே - அதன் வாசல் உள்ளே
            எங்கள் பாதங்கள் நிற்கிறதே!                            - இதோ

4.         சீயோனே உன் வாசல்களை
            ஜீவ தேவனே நேசிக்கிறார்
            சீர் மிகுந்திடு மிச் - சுவிசேஷந்தனை
            கூறி உயர்த்திடுவோம் உனையே!                     - இதோ

5.         முன்னோடியாய் இயேசு பரன்
            மூலைக் கல்லாகி சீயோனிலே
            வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
            வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்                     - இதோ

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...