என் ஜீவன் சுகம் பெலன் யாது?
1. என் ஜீவன்
சுகம் பெலன் யாது?
என் இயேசுவே யல்லாமலேது
நான் நோக்கும் போதெல்லாம்
இயேசுவையல்லாமல் வேறெதுங் காணேன்
பல்லவி
கண்டு களிப்பேன் நானே
கண் குளிரப் பார்ப்பேனே
கதி பெறுவேன், நான் கதி பெறுவேன்
அல்லேலூயா! அல்லேலூயா! - ஓ
ஆமென்! ஆமென் சுவாமி ஏசு நாதரோடு
அல்லும் பகலுமாயவர் திருப்பாதமதி லமர்ந்திடுவேன்
அறிந்திடுமோ லோக மறிந்திடுமோ - லோக
மறிந்திடுமோ - லோகம்
அறிந்திட்டால் இயேசுவைக் கண்டானந்திக்குமே
2. ஈலோகக் காட்சி எல்லாம் மாய்கை!
மேலோகம் பார்க்கவே என் ஆசை!
காணுதே மனம் காணுதே என் மனம்
காருண்ய இயேசுவை
நித்திய ஜீவியத்திலே
அத்தனோடுறவாட
அருள் புரிந்தார், இயேசு அருள்
புரிந்தார்
அல்லேலூயா அல்லேயா! - ஓ
ஆனந்தமே! பரமானந்தமே, தேவ
ஆலயம் என் அகம் ஆனதினாலே துதி ஆனந்தமிதே
அகமகிழ்வேன், நானே அகமகிழ்வேன் - நானே
இயேசுவோடென்றும் மகிழ்ந்திடுவேன்!
Comments
Post a Comment