09 June 2018

பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப்


326. இராகம் (இங்கிலீஷ்)              ஏக தாளம்

1.       பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
            பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட
            பரமானந்த கீதமங்கெழும்ப
            நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

2.         ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
            அண்டினோரெவரும் அவரைச் சேர
            அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
            நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

3.         பேதுரு பவுலும் யோவானு மங்கே
            பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்
            இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட
            நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

4.         ஜெகத்தில் சிலுவை சுமந்தோ ரெல்லாம்
            திருமுடி யணிந்திலங்கிடவும்
            தேவசேயர்களா யெல்லாரும் மாற
            நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

5.         சோதனைகளை வென்றவர் எவரும்
            துன்பம் தொல்லைதனை சகித்தவரும்
            ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க
            நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

6.         கன்னிகையைப் போல் கர்த்தன் சபையன்று
            மன்னர் மணாளனேசுவை மணந்து
            பின்னும் சொல்லரிதாம் நிலைருசிக்க
            நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...