எந்தன் பூமானைக் காண சிந்தை
325.
பல்லவி
எந்தன் பூமானைக் காண சிந்தை பெருகுதையோ
என்றைக்குக் காண்பேனோ! - ஓ!
ஓ!
1. சுந்தரத்தில் மிகுந்து அந்தரத்திலிருக்கும்
எந்தன் பூமானைக் காண - அழகுடைய
அண்ணல் இயேசுவைக் காண - எந்தன்
2. விண்ணிலிருந்தவர் மண்ணின்மேல் வந்தவர்
கன்னிகையில் பிறந்தவர் - லாசருக்காக
கண்ணீரை விட்டழுதவர் - எந்தன்
3. இன்னும் வர என்ன தாமதம் சொல்லுமோ
சொன்ன வாக்கை நினைத்து - அடியேனுந்தன்
பாதம் பணிந்து வந்தேன் - எந்தன்
4. பொல்லாதோரை இரட்சிக்க வல்லபராபரன்
என்னதுய ரடைந்தார் - அதை நினைத்தால்
சொல்ல முடியுதில்லை - எந்தன்
5. கன்னத்தில் அடிபட்டுக் கண்ணீர் விடும்வேளை
என்னை நினைத்தீரே நீர் - அதை நினைத்தால்
உம்மை மறப்பேனோ? நான் - எந்தன்
Comments
Post a Comment