05 June 2018

என் பங்கு வீதம் சுவாமி என் பாத்ரப் பங்குமவரே


212. இராகம் இங்கிலீஷ்                  (155)

1.       என் பங்கு வீதம் சுவாமி என் பாத்ரப் பங்குமவரே
          என்னுட வீதமவரால் என்றென்றும் காக்கப்படும்

2.         இன்பமாம் சுதந்திரம் எனக்கிங்கே உண்டாயிற்று
            எங்கெங்கும் முக்யமான இடத்தில் என் வீதமாச்சே

3.         எனக்கு நல்சிந்தை அருளும் ஏகோவாவைத் துதி செய்வேன்
            அதுக்கென்னை இரவிரெனது ஆத்துமம் ஏவிக்கொள்ளும்

4.         கர்த்தரை எப்போதுமென் கண்முன்னே வைத்துக் கொள்வேன்
            கர்த்தர் என் வலது பக்கம் காண்பதால் அசைய மாட்டேன்

5.         என்னிதயம் பூரிப்பாகி என் மகிமை களி கூறும்
            என்னுடல் தானும் வசமாய் இங்கே படுத்திருக்கும்

6.         ஆண்டவரென் ஆத்மாவை ஆதேசில் விடமாட்டார்
            மீண்டதம் பரிசுத்தர் மேன்மையை அழியவொட்டார்

7.         ஜீவனின் வழி எனக்குத் தெரிவித்தீர் அறியச்செய்தீர்
            தேவனின் சமுகத்தினில் செழிப்புண்டு நிறைவுமுண்டு
           
8.         தேவனின் வலபக்கத்தில் செல்வத்தின் பாக்கியங்கள்
            மேவியே என்றென்றைக்கும் விளைந்து கொண்டமைந்தே நிற்கும்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...