என்னேசு முருக்கித்தங்கம் என் நெஞ்சம் குலுக்கித் தங்கம்


211. இராகம்    தெம்பாங்கு (154)

பல்லவி

                   என்னேசு முருக்கித்தங்கம் என் நெஞ்சம் குலுக்கித் தங்கம்
                   மன்னா நீர் எனக்குச் சிங்கம் மகிழாதோ எந்தனங்கம் சுவாமி

1.         பூங்குயிலே தேங்குயிலே பூமானே தேங்குயிலே
            வான்குயிலே மான்குயிலெ ஏங்குகிறேனுனை நினைந்து

2.         ஆங்காரத்தையடக்கி ஐம்புலனையுமடக்கி
            பூங்கா விஷமடக்கி புண்ணியனைத் தேடுகின்றேன்

3.         இனத்தை விட்டேன் ஜனத்தை விட்டேன் கனத்தை விட்டேன் தனத்தை விட்டேன்
            உனக்கென்றனைக் கொடுத்துவிட்டேன் உள்ளதெல்லாம் சொல்லிவிட்டேன்

4.         போய்வருவேன் என்று மேலே போன உன்னை இன்னும் காணேன்
            நாயகனே உன்னைத் தேடி நானிலத்தில் வாடுறேனே

5.         எத்தனை நாளாயுனக்கு இத்தரையில் விழித்திருந்து
            தத்தளித்துக் காத்திடுறேன் சிதைந்து மனமுடைந்து போனேன்

6.         உன்னாவல் கொண்டடிமை என்னாவி தேகமெல்லாம்
            கண்ணாளன் உனக்களித்தேன் கண்மணியே மறந்திட்டாயோ

7.         ராஜா பரதேசி நாடாம் ரத்னபுரியே உன் வீடாம்
            சீஷனானேன் உனது ஜோடாம் திருவாக்கு மாறுவாயோ

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு