05 June 2018

பாலகர் எல்லாரும் கூடி பரமராஜனைத் தேடி


213. காபி         ஆதி தாளம் (156)

1.       பாலகர் எல்லாரும் கூடி பரமராஜனைத் தேடி
            ஆடிப்பாடி அவர் நமத்தைப் போற்றுங்கள்

2.         சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தா உந்தனுக்கு
            வந்தனமனந்தம் எங்கள் சுவாமியே

3.         மூவரிலொருவருமாய் முத்தொழில் புரிவோருமாய்
            ஆவியாயிருப்பவர்க்கு தோத்திரம்

4.         மன்னுயிரை மீட்கவென்று தம்முயிரை ஈயவந்த
            பொன்னுலகாதிபதிக்கே ஸ்தோத்திரம்

5.         ஆதியிலே ஆதாம் ஏவை அடைந்த பாவக்குணத்தை
            அகற்றிப்போட வந்தவர்க்கு ஸ்தோத்திரம்

6.         சுந்தரப்பிதா குமாரன் ஜோதி பரிசுத்தாவிக்கே
            வந்தனம் அனந்தம் எங்கள் சுவாமியே               - பாலகர்         

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...