நித்தியனை நிதமும் துதி செய்திடுவாய் மனமே


214. இராகம் (சுவாமி நீ வந்தாளவேணும்)                            பியாகு (159)

பல்லவி

                   நித்தியனை நிதமும் துதி செய்திடுவாய் மனமே

1.         அந்தி சந்தி மத்தியானம் ஆபத்து வேளையிலும்
            எந்தெந்த நேரத்திலும் ஈடேற்றிக் காத்துவந்த

2.         வானத்துக் கிரகங்கள் வகைவகையாய்ச் சுற்றிவர
            மண்ணின் மனிதருக்கு சுடரொன்று செய்தவல்ல

3.         கானாவூர்க் கலியாண வீட்டிலெல்லாரும் காண
            தண்ணீரை ரசமாக அற்புதங்கள் செய்தவல்ல

4.         அத்திமரத்திலேறி ஆண்டவா முகத்தைப்பார்க்க
            சந்தோஷமாக வந்த சகேயுக் கருள்புரிந்த

5.         நாலு நாள் கல்லறை மீதடக்கி வைத்திருந்த
            சீலன் லாசருவை உயிரோடு டெழுப்பிவைத்த

6.         கங்குல் பகல் நாற்பதுநாள் கனத்த மழை பெய்தழிக்க
            நோவாவின் குடும்பத்தில் எட்டுப்பேரை காத்துவைத்த

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே