15 June 2018

இயேசு பரனை எங்களின் ராஜனை


பல்லவி

          இயேசு பரனை எங்களின் ராஜனை
            ஏற்றியே போற்றியே வாழ்த்திடுவோம்

அனுபல்லவி

            இகபர சுகத்தை ஏழைகளெமக்கு
            இலவசமாய் அவரீந்தாரே

சரணங்கள்

1.         காசினியில் கரிசனையாய் வந்து
            கஷ்டத்தைச் சகித்தார் கர்த்தர் தாமே
            பாசமாக பாடுவோம் நாமே
            மேசியாவின் நாமத்தையே                    - இயேசு

2.         மாண்டுபோன மாந்தரை மீட்க
            மகிதலம் வந்த நம் மகிபனையே
            மாசில்லாமல் ஆசையோடு
            நேசரில் நாம் மகிழ்ந்திடவே                 - இயேசு

3.         மரணபயத்தால் நடுங்கின நம்மை
            மகிமையால் நிறைத்துமே மகிழச்செய்தார்
            சேவையே புரிவோம் இயேசுவின் நாமம்
            சிறந்து இலங்கி செழித்திடவே            - இயேசு

4.         தாசரைப் போல் தாழ்மையை அணிந்த
            நேசரை நேயமாய்ப் பின்பற்றுவோம்
            வேஷத்தை ஒழித்து தேவனில் நிலைத்து
            வேதாளம் நடுங்கவே ஜெயித்திடுவோம் - இயேசு

5.         தாவி வரும் பாவியை ஒருபோதும்
            தள்ளாத இரட்சகன் ஜீவிப்பதால்
            தாமதமேனோ பாவியே வாராய்
            தயாபரனண்டை சேர்ந்திடவே              - இயேசு

6.         மேகமீதினில் மேசியா வருவார்
            வேகமாய் நம்மைச் சேர்த்திடவே
            வேறு ரூபமாய் மாறுவோம் நாமே
            மேலோகத்திலென்றும் ஜீவிக்கவே         - இயேசு

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...