எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
பல்லவி
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால்
உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே
உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த
வேளையிலும் துதிப்பேன்
சரணங்கள்
1. ஆதியும்
நீரே - அந்தமும் நீரே
ஜோதியும்
நீரே - என் சொந்தமும் நேரே - எந்த
2. தாய்
தந்தை நீரே தாதையும் நீரே
தாபரம்
நீரே - என் தாரகம் நீரே -
எந்த
3. வாழ்விலும்
நீரே - தாழ்விலும் நீரே
வாதையில்
நீரே - என் பாதையில் நீரே - எந்த
4. வானிலும்
நீரே பூவிலும் நீரே
ஆழியில்
நீரே - என் ஆபத்தில் நீரே - எந்த
5. துன்ப
நேரத்தில் இன்பமும் நேரே
இன்னல்
வேளையில் - என் மாறிடா நேசர் - எந்த
6. ஞான
வைத்தியராம் - ஔஷதம் நீரே
ஆத்ம
நேசராம் - என் நண்பரும் நீரே -
எந்த
7. ஞானமும்
நீரே - கானமும் நீரே
தானமும்
நீரே - என் நாதனும் நீரே -
எந்த
8. ஆறுதல்
நீரே - ஆதாரம் நீரே
ஆசையும்
நீரே - என் ஆனந்தம் நீரே - எந்த
9. மீட்பரும்
நீரே - என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும்
நீரே - என் மகிமையும் நீரே - எந்த
10. தேவனும்
நீரே - என் ஜீவனும் நீரே
ராஜராஜனாம்
- என் சர்வமும் நீரே - எந்த
Comments
Post a Comment