02 June 2018

தேவா இந்த நேரம் நின்னாசீர்வாதம் தா


183.  இராகம் (தேவா பரகிறிஸ்து தேவா பரதேவ)                             (139)

பல்லவி

          தேவா இந்த நேரம் நின்னாசீர்வாதம் தா
         
1.         அன்று கானாவூர்க் கலியாணம் சென்று சிறப்பித்தார் ஆ! ஆ!
            நன்று மிகவே இன்றிங்கே கூடி மன்றல் சிறந்திடவே - கிறிஸ்து

2.         ஆதிமூலனே நீதிகுணாளனே ஜாதிகள்நேசனே ஆ! ஆ!
            தீதில்லாமலே மாது மணாளனும் சேதமொன்றின்றி வாழ - கிறிஸ்து

3.         இன்று இம்மணப் பந்தலில் நாங்கள் இனஜனபந்துக்களாய் - ஆ! ஆ!
            இங்கிதமாகவே இஷ்டரும் கூடி மங்களம் கொண்டாட - கிறிஸ்து

4.         ஈந்திட உந்தன் ஆவி நிறைவாய் ஆடவர் மங்கையர்க்கு ஆ! ஆ!
            பகர்ந்திடும் இகபர நன்மை பாக்கியம் சகல சம்பத்துடன் - கிறிஸ்து

5.         பெற்றோர் வாழ்க உற்றோர் வாழ்க மற்றோர்களும் வாழ்க ஆ! ஆ!
            எத்திசையுள்ள வெற்றி கிறிஸ்தோர் மிகவே தழைத்தோங்க - கிறிஸ்து

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...