ஆனந்தம் ஆனந்தம் ஆச்சுதே - எங்கள்
181. (137)
பல்லவி
ஆனந்தம்
ஆனந்தம் ஆச்சுதே - எங்கள்
அண்ணா அண்ணி கலியாணம் வாய்த்தது
அனுபல்லவி
ஆனந்தம் ஆனந்தமென்று அனைவர்
கொண்டாட இன்று
1. தேவாதி தேவர்கள் பார்த்திட - புகழ்
மேவும் பந்துக்கள் பலர் போற்றிட
பாவலரும் பெரியாரும் பல்லோரும் ஆசிகூற
- ஆனந்தம்
2. மங்கள வாத்தியங்கள் முழங்கவே - சீர்
சங்கீத வாத்தியங்கள் துலங்கவே
மங்கையர் பாடிட மறையோரும் வேதம்கூற - ஆனந்தம்
3. அண்ணா மணமகனானாரே - எங்கள்
அண்ணி மணமகளானாளே
இவ்வுலகில் இவ்விருபேருமே நன்மை பெற - ஆனந்தம்
4. சந்தன புஷ்பங்கள் ஏந்தியே - பாரில்
பத்து மித்திரர்களும் வந்தாரே
வந்தவர்க்கு விருந்துகள் சந்தோஷமாகச்செய்ய - ஆனந்தம்
5. விண்ணவர் மலர்களைத் தூவியே - கருதும்
கண்ணுள்ளவரைக் கண்டு களித்திட
எண்ணமறிந்தோர் புகழ் தேவரை ஏற்றிப்பாட - ஆனந்தம்
Comments
Post a Comment