27 June 2018

தேவன் இயேசு வருவார் - நம்


                   தேவன் இயேசு வருவார் - நம்
                        தேவை யாவும் அறிவார்
                        காலம் அறிந்தே வருவார் - நம்மைக்
                        கண் போலக் காத்து அருள்வார்

சரணங்கள்

1.         பிள்ளை அப்பமதைக் கேட்கும்போது
            தந்தை கல்லினைத் தருவதுண்டோ?
            முட்டைக்கு பதிலாய் பாம்பினையும்
            மூடன் எவனும் தருவதுண்டோ?
            விண்ணவராம் இயேசுவே நம் தந்தையல்லவா
            வேண்டுவன தருவதும் மிக உறுதியல்லவா? - ஆகாகா            - தேவன்

2.         நீங்கள் உள்ளத்திலே கவலை கொள்ளாமல்
            உங்கள் தேவனுக்குத் தெரிவியுங்கள்
            கானக புஷ்பங்களைப் போஷிப்பவர்
            கருத்துடன் நம்மையும் காத்திடுவார்
            காலம் வரும் வாழ்வும் வரும் உறுதி கொள்ளுவோம்
            கர்த்தரவர் பாதத்தில் காத்து இருப்போம் - ஆகாகா                - தேவன்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...