08 June 2018

மங்களம் ஜெய மங்களம்


315.             (250)

பல்லவி

                   மங்களம் ஜெய மங்களம் கிருபாம்பர தேவர்க்கே
                   வாழி கனம் ஊழி ஊழி வல்ல தேவர்க்கே

1.         தேவதா பிதா சுதா சுத்தாவி யேகத்தா
            திரியோகாம்பர திரிலோகாதி திரிலோகாதியா

2.         தம்பூர் பிடில் மிர்தங்கம் வீணை சரப்தசாரங்கி
            ஜாலா டிக்ரி கன்செர்ட்டினா நாதத்தோடிலங்க
           
3.         வானசுர சேனையோடு மானிடர் நாமும்
            ஞானக்கியான தியான கீர்த்தனம் பாடு ஜமாஜம்

4.         ரத்னப்பரதேசி சக்தி முக்தி நீதானே
            மோனசுந்தர தானதர்ம ஞான பூமானே

5.         இங்கு வந்திருக்கும் எல்லாரும் வாழ்கவே
            இங்குகூடி பாட்டுப்பாடும் பாடகர் வாழவே

6.         இந்த சபையார் இந்த வீட்டார் என்றும் வாழவே
            எங்கள் ஏசு மகாராஜர் என்றும் வாழவே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...