08 June 2018

வாருமையா போதகரே


314. இராகம் (ஆனந்தமே பேரானந்தமே)

 

1.       வாருமையா போதகரே, வந்தெம்மிடம் தங்கியிரும்

            சேருமையா பந்தியினில், சிறியவராம் எங்களிடம்

2.         ஒளி மங்கி இருளாச்சே உத்தமனே வாருமையா
            களித்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்வாய்

3.         ஆதரையிலெம் ஆறுதலே, அன்பருக்கு சதா உறவே
            பேதையர்க்குப் பேரறிவே, பாதைமெய் ஜீவ சற்குருவே

4.         நாமிருப்போம் நடுவிலென்றீர், நாயனுன் நாமம் நமஸ்கரிக்க
            தாமதமேன் தயை புரிய, தற்பரனே நலம் தருவாம்

5.         உந்தன் மனை திருச்சபையை, வையமெங்கும் வளர்த்திடுவாய்
            பந்த மற பரிகரித்தே, பாக்கியமளித்தாண்டருள்வாய்

6.         பாடும் தேவநாயகன் கவி, பாரினில் கேட்டனுதினமும்
            தேடும் தொண்டர் துலங்கவுந்தன், திவ்ய ஆவி தந்தருள்வாய்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...