28 June 2018

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்


பல்லவி

                   இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
                        ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
                        இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார்

1.         எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்
            என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
            எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்                 - இயேசு

2.         கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்
            கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
            கருத்துடன் உன்னைக் காத்திடவே                 - இயேசு

3.         சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
            அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
            தாமதமின்றி நீ வந்திடுவாய்                             - இயேசு

4.         சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
            யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
            கிருபையாய் அன்பை அளித்திடவே                 - இயேசு

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...