மாம்பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லிகைப்பூ
176. செஞ்சுருட்டி ஆதி தாளம் (132)
1. மாம்பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லிகைப்பூ
பூப்பூ
புனிதம்பூ பூமான் தாவீது வங்கிஷப்பூ
2. ஜோதியாய்
வந்த பூ ஜொலித்து வழங்கும் பூ
நீதியாய்
நிறைந்த பூ நித்தம் நம்மைக் காக்கும் பூ
3. ஆதியாயிருந்த
பூ ஆதிரையில் வந்த பூ
தேவ
தேவ தேவன் பூ தேசிகர்கள் புகழும் பூ
4. சின்னப்
பூ சிறிய பூ தேசத்தார் புகழும் பூ
அன்னப்
பூ ஆசைப் பூ அண்டினோரைக் காக்கும் பூ
5. வானுலகை
விட்டப் பூ வந்த மண்ணில் உதித்த பூ
யாவரும்
வைக்கும் பூ பாசத்தால் நிறைந்த பூ
6. தேசியர்
அணியும் பூ தேசத்தோர் மொய்க்கும் பூ
வாசமாய்
நிறைந்த பூ வன்மையுடன் காக்கும் பூ
7. கானாவூருக்கு
வந்த பூ கலியாணத்தில் புகழ்ந்த பூ
கனிரசத்தைக்
கொடுத்த பூ களங்க மில்லா ஞானப்பூ
8. நீடூழி
வாழும் பூ நித்தியமாய் காக்கும் பூ
காலை
மாலை துதிக்கும் பூ கர்தத்துவ முள்ள பூ
9. பிச்சிப்
பூ பிள்ளைப் பூ பின்னால் வரும் சொர்ணப் பூ
எத்திசைக்கு
மேற்ற பூ ஏகமாய் நிறைந்த பூ
10. கர்த்தத்துவமுள்ள
பூ களங்கமில்லா ஞானப் பூ
கர்த்தரே
அந்தப் பூ கருத்தாய் நீ தேடும் பூ
11. நித்தம்
நித்தம் நிலைக்கும் பூ பக்தர் பேரில் பாசப் பூ
விசித்திரமாய்
மரியிடம் விந்தையாய் வந்த பூ
12. இந்த
மணமக்களை சொந்தமாய்க் கைக்கொண்ட பூ
என்று
மிவரை ஆளும் பூ ஏசுக்கிறிஸ்தென்ற பூ
Comments
Post a Comment