மலரெடுத்து பூ முடித்து


174. பியாகு     ஆதி தாளம் (130)

பல்லவி

                        மலரெடுத்து பூ முடித்து
                        மணமக்கள் மேல் சொரிவோம் தங்கை

அனுபல்லவி

                        குணமகள் மாது மங்கை குலுங்க
                        கொன்னைப்பூ தென்னைக் கன்னிப்பூ நன்னிப்பூ

1.         சந்ததமும் வாழ்த்திருக்க இந்த மணப் பந்தலிலே
            விந்தையாக வாழ்ந்திருக்க
            வேந்திப்பூ சேந்திப்பூ காந்திப்பூ லாந்திப்பூ        - மலரெடுத்து

2.         காலாகாலமா யிவரைக் கண்மணிபோல் பாதுகாத்து
            ஆதிரையில் வாழ்ந்திருக்க
            ஆலம்பூ வேலம்பூ வேலம்பூ ஞாலம்பூ                 - மலரெடுத்து

3.         வேதவிழும் பூமலரில் விண்மலர்தான் பொறுக்கி வாழ
            இத்தரையில் சுகித்திருக்க
            தாழம்பூ ரோஜாப்பூ பிச்சிப்பூ வேதன்பூ               - மலரெடுத்து

4.         அம்பரத்தில் வாழ்ந்திருக்க அமலாநீர் கிருபை செய்யும்
            அனவரதம் சுகித்திருக்க
            ஆளன்பு மெய்யன்பு வேதன்பு ஏசன்பு                   - மலரெடுத்து


3.         வேதவிழும் பூமலரில் விண்மலர்
 நித்திய ஜீவ வழியில் பக்தியுடனே நடந்து
எத்தருண முங்களிக்க - 2
அத்திப்பூ, அகத்திப்பூ, துத்திப்பூ, பிச்சிப்பூ                  - மலரெடுத்து

3. இந்தமணப் பந்தலிலே சந்ததமும் வாழ்ந்திருக்க
விந்தையுடன் மனங்களிக்க -2
வேந்திப்பூ, கேந்திப்பூ, சேந்திப்பூ, சிவந்திப் பூ              - மலரெடுத்து



6. மணவாளன் ................... மணவாட்டி .....................
குணமுடனே வாழ்ந்திருக்க -2
கற்புப்பூ, தாழ்மைப்பூ, அன்புப்பூ, இன்பப்பூ                     - மலரெடுத்து

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு