பெத்தலையில் பிறந்தவரைப்
சரசாங்கி திஸ்ர ஏகதாளம்
பல்லவி
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித்
துதி, மனமே - இன்னும்
சரணங்கள்
1. சருவத்தையும்
படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள
தாய்மடியில் தலைசாய்க்கலானார். - பெத்
2. சிங்காசனம்
வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
பங்கமுற்ற
பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்
3. முன்பு
அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
மோட்சம்
விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே -
பெத்
4. ஆவிகளின்
போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் - இங்கு
ஆக்களுட
சத்தத்துக்குள் அழுது பிறந்தார் -
பெத்
5. இந்தடைவாய்
அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன்
போய்த்துதிக்க ஏகிடுவோமே -
பெத்
- ஜான் பால்மர், நாகர்கோவில்.
Comments
Post a Comment