பிறந்தார், பிறந்தார்


          பிறந்தார், பிறந்தார்
            வானவர் புவி மானிடர் புகழ்
            பாடிட பிறந்தார்

சரணங்கள்

1.         மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
            மா தேவ தேவனே
            மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
            மா தியாகியாய் வளர்ந்தார்                                - பிறந்தார்

2.         பாவ உலக மானிடர் மேல்
            பாசம் அடைந்தவரே
            மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
            மா ஜோதியாய் திகழ்ந்தார்                                - பிறந்தார்

3.         பொறுமை, தாழ்மை, அன்புருக்கம்
            பெருந்தன்மை உள்ளவரே
            மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால்
            மேலான நாமம் பெற்றார்                         - பிறந்தார்

4.         கந்தைத் துணியோ கர்த்தருக்கு
            கடும் ஏழ்மைக் கோலமதோ
            விலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும்
            வீண் ஆசையும் நமக்கேன்                                - பிறந்தார்

5.         குருவைத் தொடரும் சீஷர்களும்
            குருபோல மாறிடுவார்
            அவர் நாமம் தரித்தவர் யாவருமே
            அவர் பாதையில் நடப்போம்                             - பிறந்தார்

6.         இயேசு பிறந்தார் உள்ளமதில்
            இதை எங்கும் சாற்றிடுவோம்
            புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
            பரன் ஆவியில் மகிழ்வோம்                               - பிறந்தார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு