02 June 2018

எம் நாதா வேதா போதா சற்பிரசாதா


197. இராகம் (இங்கிலீஷ்)         (147)

பல்லவி

                   எம் நாதா வேதா போதா சற்பிரசாதா
                   நவகுணநீதா நாதா தூதா தினசரணம்

அனுபல்லவி

          அதீத சுதந்தர இமையவர் கூடி அல்பா ஒமேகா ஜெய ஜெய
            அல்லலு அல்லலு அல்லேலூயா ஓசன்னா பாடுவோம்

1.         வந்தோம் வந்தோம் வந்தோம் திருவடி ஏசையா வந்தோம்
            தந்தோம் தந்தோம் இங்கிதமாயிதோ தந்தோம் வந்தனமே
            சந்தோஷ நாளிதிலே கிறிஸ்தாண்ட ஜனவரி முதலாம் நாள் - இன்று
            மங்கள சந்தோஷ இன்சொல் விளங்கிடும் சகோதரரின் திருநாள் - எம்

2.         அத்தா கர்த்தா பக்தா ஓம் பரிசுத்தா சுரர் பதியே ஆ
            நித்தா நித்தா முக்தி சித்தா ஸ்திரி வித்தரசர் துதியே
            அரூப ரூப அன்புர ஞான ஆரண காரணனே உம்மை
            அண்டிய தொண்டரை மண்டலமீ தருள் கொண்டு நடத்திடுமேன் - எம்

3.         நேசா பரிமளவாசா மறையுபதேசா திருக்குமரேசா
            ரஞ்சித ரோஜாநரர் பாவநாசா ஒரு சருவேசா ஸ்தோத்திரமே
            சுவாமி தாசருக்குத் தாரகம் நீயே சகலமும் நீதானே என்றும்
            தராதலமே புகழ் ராஜகுமரர் சகாய மனோன்மணியே - எம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...