01 June 2018

இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே


171. (இராகம் நாதநாமக்கிரியை)    சாப்பு தாளம்

                        இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
                        நேசமுசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்

1.         என்ன மதுரம் அவர் நன்னய நாமச்சுவை
            என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே

2.         பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்
            அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் ஏசிருக்கையில்

3.         வியாதியால் எந்தனது காயங்கெட்டுப்போயினும்
            மாய தோற்றத்தை ஏசு நாயகன் மாற்றிடுவார்

4.         லோகம் என்னை எதிர்த்துப் போவென்று சொல்லிடினும்
            சோகம் அடைவேனோ என் ஏகன் எனக்கிருக்க

5.         என்னென்ன மாயலோகக் கன்னல் என்மேல் வந்தாலும்
            முன்னும் பின்னுமாயேசு என்னை நடத்திடுவார்

6.         பாவத்தால் என்னில் வந்த சாபக்கறைகள் மாற்றி
            சோபித நீதியுடை ஆபரணமாய் ஈவார்

7.         ஆசை என் மணவாட்டி ஆக்குவேன் உன்னை எனும்
            நேச உறுதியுரை இயேசு எனக் களித்தார்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...