சீர் தங்கும் ஏக திருத்துவத்தைச் சிந்தைச்செய்து
172. (126)
அகவல்
1. சீர் தங்கும்
ஏக திருத்துவத்தைச் சிந்தைச்செய்து
பார்
தங்கும் யாவும் படைத்த பரனைத் தொழுது
நீதிசுரன் பொற்பதத்தை நித்தியமும் போற்றிசெய்து
ஆவி அருள் நற்பரிசுத் தாவிதனை ஸ்தோத்தரித்து
கானக் கலிலேயா காவலனை முன்னடவாய்
சீயோன் மலைமேலே தேவாட்டுக் குட்டியற்கு
தூயோன் மனைவியெனும் துய்ய திருச்சபைக்கு
கொண்ட கலியாணக்கோலமெல்லாம் கூர்ந்தறிந்து
கண்ட பெரியோர் கருத்துக்கிசைவாக
வையமீது மன்றல் வளர்ந்தோங்க வாழ்த்துதற்கு
துய்ய சுதனின் துணைச்சிலுவை முன்னடக்க
2. தேவ கிருபையுண்டாம் தேவாசீர்வாதமுண்டாம்
தேவசமாதானம் தினமுமுமக்குண்டாகும்
ஆபிரகாங்கோத்திரத்தை போலே அரசாள்வீர்
எப்ராயீம் கோத்திரத்தை போலே செழித்திருப்பீர்
மானமனாசேயின் வங்கிஷம்போல் வாழ்ந்திருப்பீர்
ஞானசாலோமோன் அதிபன்போற் சீர்பெறுவீர்
துங்கோன் தாவீது சுமுகனைப்போலே துலங்கி
எங்கும் மணக்கும் எலிசபெத் இறைவியைப்போலே
வாழ்வீர்
3. பதினாறு ஆண் பெறுவீர் பதினாறு பெண் பெறுவீர்
மதிவதன்னீ யோவைப்போலே வளர்ந்திருப்பீர்
மெய்ப்புகழீதென்பதற்கு விண்ணுலகோர் தான்
வாழி
தப்பில்லை யீதென்பதற்கு தாரணியோர்தான்
வாழி
வாழி பரிசுத்த சமுசாரமெனுமார்க்கமிது
ஊழியுள்ள கால முலகமதிலே வாழி
Comments
Post a Comment