சந்தோஷமாகவே நீ போய் வா என் தங்கையரே
189. இராகம் (இன்னமும் தாமதிகதால் என்னமா)
பல்லவி
சந்தோஷமாகவே
நீ போய் வா என் தங்கையரே
அனுபல்லவி
சந்தோஷமாகப் போய்வாயே - சந்தோஷ
1. எந்தன் பரனருளால் என்றென்றும் நீ செழித்து
சந்ததம் வாழ்ந்திருப்பாயே - சந்தோஷ
2. கோடான கோடியாய் நீ குவலய மேற் பெருகி
நீடாயுள் பெற்றிருப்பாயே - சந்தோஷ
3. சத்துருக்களை ஜெயித்து சந்ததியாய்க் கெலித்து
இத்தரையில் வாழ்ந்திருப்பாயே - சந்தோஷ
4. கர்த்தருக்குப்பயந்துன் காலங்களைக் கடத்தி
உத்தமப்பெயர் எடுப்பாயே - சந்தோஷ
5. சாந்தம் பொறுமை தயை சற்குணம் தானதர்மம்
ஈந்து சுகித்திருப்பாயே - சந்தோஷ
6. பக்தன் .................. க்கு பண்பாய் கீழ்ப்படிந்து
நித்தம் வாழ்ந்திருப்பாயே - சந்தோஷ
7. தாதிமாரோடு உந்தன் சாமான்களை எடுத்து
நீதியாய் போய் வருவாயே - சந்தோஷ
8. ஏசுபரன் சுதன்தன் திருக்கரத்தாலுங்களை
ஆசீர்வதிப்பாராகவே - சந்தோஷ
Comments
Post a Comment