வந்தாளிம் மண வீட்டிலே - மண
187. இராகம் (நித்தம் அருள் செய் தாயாளனே) (295)
பல்லவி
வந்தாளிம்
மண வீட்டிலே - மண
வாளரில்
அன்பு பாராட்டியே, சுவாமி
1. ஏதமில்லாத காலத்திலே, ஆதம்
ஏவையைப் பூங்கா வனத்திலே
ஆதரவாயிருபேரும் சிநேக
மாயிருந்துனைத்துதித்தார்களன்பாக
நாதனே இம்மணர் இருவரையும் காரும்
நலமுடன் உனதருள்புரி - பரிவாக - வந்தாளிம்
2. சுந்தரச்சீயோன் குமாரியை, உனை
துதித்தகமகிழுஞ் சிங்காரியை
கந்த மணமுடிக்க என் மனந்தேறி
கலியாணம் செய்துகொண்ட கருணையின் வாரி
இந்த மணருக்குந்தன் அருள் வரம் சூடி
ரட்சிக்கவேண்டும் பர உபகாரி - வந்தாளிம்
3. உத்தம (தகப்பனார் பெயர்) பெற்ற
புத்திரன் (மாப்பிள்ளை பேர் அலுவல்)
உத்தமி மணமகள் (பெண் பேர்)
உரிமை பெருமையுடன் உறுதியாய் வாழ
அத்தனெ உனதருள் கரம் இவர்மேலே
அனுதினம் அமர்ந்திட அருள்செய்யும் சுவாமி - வந்தாளிம்
4. பூமகன் பூமகள் வாழ்கவே, இவர்
புத்ர சந்தானத்துடன் வாழ்கவே
கலியாணத்திற்கு வரும் யாவரும் வாழ்க
கலியாண காரியம் கைகூடி வாழ
தாமணம் தேவகுமாரனின் நாமம்
சங்கீர்த்தனம் பெற்று சந்ததம் வாழ - வந்தாளிம்
Comments
Post a Comment