09 June 2018

இன்பக்கானானுக்குள் ஏழை


346.

1.       இன்பக்கானானுக்குள் ஏழை செல்ல
          இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன்

2.         பரம சுகங்களின் இனியரசம்
            பரமேசனொடுயான் பானம் செய்வேன்
           
3.         பரமபிதா வெந்தன் கண்ணினின்று
            அழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார்

4.         சத்துருசேனைகள் அங்கே இல்லை
            இயேசுவின் புத்திரர் மாத்திரமே

5.         தேவாட்டுக்குட்டியின் திருமனைவி
            சிறப்புடனிலங்கிடும் தேசமது

6.         கேரூபின் சேராபின் பாடிடவே
            மூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே

7.         சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாதே
            சொர்கலோக நாட்டுக்கோர் இணையில்லையே

8.         பரிசுத்த ஆவியின் பளிங்குநதி
            பளபவென்றொழுகிடும் தேசமது
           
9.         ஜீவவிருட்சமங்காற்றருகில்
            மாதந்தோறும் புதுக்கனித் தருமே

10.       நவரத்ன நிர்மிதபட்டணத்தில்
            இராப்பகல் சூரியன் யேசுதானே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...