வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி
345.
பல்லவி
வாழ்த்துகிறேன்
இயேசு சுவாமி
வாழ்த்துகிறேன் இக்காலையிலே
அனுபல்லவி
அற்புதமாய் இராமுழுவதும் அடியேனைக் காத்தீரே - வாழ்
1. உமது செட்டை நிழலதிலே படுத்திருந்தேன் இராமுழுவதும்
உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும் -வாழ்
2. நித்திரையை இன்பமாக்கி பத்திரமாய் இருதயத்தை
சுத்தமான இரத்தத்திற்குள் சுத்தமாக வைத்திருந்தீர் - வாழ்
3. பலவிதமாம் சோதனைகள் எமைச் சூழ வந்திருந்தும்
ஒன்றும் எமை அணுகாமல் அன்புடனே பாதுகாத்தீர்
- வாழ்
4. சந்திப்பீரே இக்காலைதனில் தந்திடவே திருவரங்கள்
சந்தோஷமாய் பகல் முழுதும் ஆவிக்குள் யான்
பிழைக்க - வாழ்
5. தந்திடுவீர் அபிஷேகம் புதிதாக இப்புது நாளில்
நடத்திடுவீர் ஆவியினால் உமது திருச்சித்தமதில் - வாழ்
6. பாவமென்றும் அணுகிடாமல் பரிசுத்தமாம் பாதை
செல்ல
தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன் - வாழ்
7. படைக்கிறேன் என் இருதயத்தை பலிபீடத்தில் முற்றுமாக
கண்களுடன் செவியோடு வாயும் கையும் காலுமாக - வாழ்
8. செய்வேன்யான் எப்பொழுதும் உம்சித்தமே ஆசையுடன்
ஒழித்திடுவேன் வீண் வார்த்தை பேசிடுவேன்
உம்வாக்கை - வாழ்
9. எனைக் காண்போர் உம்மைக்காண உம்சாயல் எனில்
வேண்டும்
தந்திடுவீர் தாழ்மையும் பொறுமையுடன் அன்புமாக - வாழ்
10. நேசரே உம்திரு வருகை இந்நாளிலிருந்திடினும்
ஆசையுடன் சந்திக்கவே ஆயத்தமாய் வைத்துக்கொள்ளும் - வாழ்
Comments
Post a Comment