05 June 2018

உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக்கூடுங்கள்


210. சங்கராபரணம்           த்ருபட தாளம் (153)

1.         உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக்கூடுங்கள்
            மன்னன் ஏசு நாதருக்கு வான்முடி சூட்டுங்கள்

2.         நாலா தேசத்திலுள்ளோர்களே நடந்து வாருங்கள்
            மேலோன் ஏசு நாதருக்கு மெய்முடிசூட்டுங்கள்

3.         ரத்தச்சாட்சி மார்களே உங்கள் சாட்சியம் சொல்லுங்கள்
            முத்தமிட்டு ஏசுவுக்கு மேல்முடிசூட்டுங்கள்

4.         குற்றமில்லாப் பாலகரே கூடிக்குலாவுங்கள்
            வெற்றிவேந்தன் ஏசுவுக்கு வெண்முடி சூட்டுங்கள்

5.         வாலிபரே கன்னியரே வந்து மகிழுங்கள்
            சாலேம் மக்கள் கூட்டத்தோடே போய்முடி சூட்டுங்கள்

6.         நல்மனதோடே சொல்கிறேன் நாட்டார்களே நீங்கள்
            புன்னகைகொண்டு நிற்பானேன் பூமுடி சூட்டுங்கள்

7.         இந்தியாதேசத்தார்களே ஏகமாய் கூடுங்கள்
            பூந்தனங்கள் அற்பமொன்றே பொன்முடி சூட்டுங்கள்

8.         துஷ்டராமரபிகளே தோத்திரம் செய்யுங்கள்
            இஷ்டரான ஏசுவுக்கு எம்முடி சூட்டுங்கள்

9.         சகலதேசத்துள்ளோரே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
            மகாராஜரிவரே மாமுடி சூட்டுங்கள்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...