28 June 2018

அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய்

கன்:187

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             பல்லவி

 

                   அழைக்கிறார் அழைக்கிறார்

                        அன்பாய் இன்றே உன்னை

                        கல்லும் கரையும் கல்வாரியண்டை

                        கர்த்தர் அழைக்கிறார்

 

                             சரணங்கள்

 

1.         கேட்டின் மகன் கெட்டழிந்தான்

            கெட்ட குமாரனைப்போல்

            பாவத்தின் சம்பளம் மரணமே

            பாவத்தில் மாளாதே - அழை

 

2.         உந்தன் நீதி கந்தையாகும்

            உன்னில் நன்மை ஒன்றில்லை

            பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்

            பாவியை நேசித்தார் - அழை

 

3.         பாவங்களை மறைப்பவன்

            பாரில் வாழ்வை அடையான்

            சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்

            சங்காரம் அடைவார் - அழை

 

4.         நானே வழி சத்தியமும்

            நித்திய ஜீவன் என்றார்

            இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்

            இரட்சணியம் அடைவாய் - அழை

 

5.         காலங்களும் கடந்திடும்

            வால வயதும் மாறும்

            தேவனைச் சந்திக்கும் வேளையிதே

            தேடி நீ வாராயோ - அழை

 

 

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...