06 June 2018

சந்ததம் உந்தனையே எந்தனிருதயத்தில்


242. இராகம் ஆனந்தப் பண்டிகையை ஆசரிப்போம்                       (194)

பல்லவி

                   சந்ததம் உந்தனையே எந்தனிருதயத்தில் வைக்க

அனுபல்லவி

                        எந்தனிருதயத்தில் வைக்க எந்தனிருதயத்தில் வைக்க

1.         எந்தனின் சிந்தையது உந்தனையே தேடுதையா
            தேடுதையா தேடுதையா உந்தனையே தேடுதையா
            தேடியே நாடியுந்தன் பாதமடிபணிந்தேனையா               - சந்ததம்

2.         சீர்மிகும் இச்சபையில் செந்தமிழைச் சொல்வதற்கு
            சொல்லி வெகு இனிமையுடன் பாடிவரும் பாவலர்க்கு
            ரட்சண்ய பாதைதனையே திறந்து காட்டுமையா           - சந்ததம்

3.         பிடில் மிர்தங்கமுடன் பேசுதே கைத்தாளங்களும்
            நாதங்களைத் தானிழந்து நாதரேசுவைப் பணிந்து
            நன்றியைக் காட்டுமுந்தன் நண்பரோடு வாருமையா      - சந்ததம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...