தருணத்தில் எனக்குதவி செய்யுமேன்


243. இராகம் பைரவி                                                      ரூபகதாளம்     (195)
(தேவன் மனிதனான விந்தையை)

பல்லவி

                   தருணத்தில் எனக்குதவி செய்யுமேன்
                   தற்பரா ஏசுதேவா

அனுபல்லவி

                   மரணத்தருவாய் மயங்கித் தியங்கிய
                        வஞ்சகம் நிறைந்த வலபாரிசக்கள்ளன்
                        தேறுதலற்று நின் அன்புள்ள பாதத்தை
                        சேர்ந்திடக் கைதூக்கி ஏந்தினாற்போல் சுவாமி

1.         வாய்பேசா மாந்தற் செவிடர் முடவர்க்கோர் வாக்கில் சுகமளித்தோனே - சிறு
            நாயினூர்க்கைம்பெண் தன் சேய்பின் கண்ணீர் விட நன்மை அளித்த சீமானே
            தாய்தந்தை நேசர் உலக சம்பாத்தியம்
            சற்றுநேரம் கண்டறுந்துபோம் வாத்தியம்
            நோய்கொண் டொடுங்கிய பாவிக்குன தருள்
            நோக்கி எனின் குறை நீக்கிடாயோ சுவாமி       - தருணத்தில்

2.         ஐந்தப்பம் இரண்டு மீன்கொண்டு ஐயாயிரம் ஆட்களைப் போஷிப்பித்தீரே - மனம்
            நைந்தசீடருக் கின்னரத்தேரியில் நல்ல மீன் சிக்கச் செய்தீரே
            மைந்தர் தமக்கேதும் வேண்டிய வேளை
            மனுவேலே நின்பாதம் தாவி இறைஞ்சி
            அமைந்து பணியக் கருணை புரிந்த என்
            ஆத்ம சரீரத்துக்கானவை ஈந்திந்த                  - தருணத்தில்

3.         கங்குல் பகலும் கலக்கம் துயர் மிஞ்சி கரிகறுத்தேனே கோவே எனைப்
            பங்கப்படுத்தும் சங்கடத்துட்பட்டு பரிதபித்தேனே தேவே
            அற்பா செய் தீவினையால் மனம் வேகுது
            தங்க உனதைந்து காயம் அடைக்கலம்
            தந்து தனியனைத் தற்காத்திடும் சுவாமி           - தருணத்தில்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு