தோழரே சேர்ந்து வாருங்கள்
241. பிலஹம்சா ஏக தாளம் (193)
பல்லவி
தோழரே
சேர்ந்து வாருங்கள்
தேவனைப்
புகழ்ந்து பாடுங்கள்
சேனையின் தேவன் நல்லவர்
தேவன் நல்லவர் தேவன் நல்லவர்
என்றல்லேலூயா சொல்லி ஆடுங்கள்
1. காவலர் தளர்ந்து போய்ப் பெலசாலிகள் கூனிப்
போமுன்னும்
கிண்ணிகள் நசுங்கிப் போமுனும் கேட்பவர்
குன்றிப் போமுனும்
பார்ப்பவர் மறைந்து போமுனும்
ஆதரவான ஏசுநாதரை வாலிபத்தினில் நீர் நினைத்திடும்
- தோழரே
2. கடைசி நாள் வரும்போது பரிசுத்தராய் ஆர்பரிக்கவும்
பேரிகை தொனிக்கக் கேட்கவும் தேவனைத் தரிசித்தாளவும்
வாலவயதில் ஜீவநதியில் தாகந்தீர்த்து உம்பாவம்
நீக்கிடும் - தோழரே
3. மைந்தனார் பதத்தைப் போற்றி நல்விந்தையாய்
சிறந்து நல்வேத
மந்தையில் சேர்த்திடும் திருவேந்தனை வணங்கிடும்
பரி
சுத்தனைப் போற்றிடும் மறு
லோகமதினில் தூதசேனையோடேகி மாமகிழாகி வாழலாம்
- தோழரே
Comments
Post a Comment