28 June 2018

பாவி உன் மீட்பர் கரிசனையாய்


சரணங்கள்

1.       பாவி உன் மீட்பர் கரிசனையாய்
            அழைக்கிறார்! அழைக்கிறார்!
            அலைந்து திரிந்து ஏன் கெடுவாய்?
            இயேசுவின் இரட்சிப்பைப் பார்

பல்லவி

                        அழைக்கிறார்! அழைக்கிறார்!
                        விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்

2.         இளைத்தும் தவித்தும் போனவனை
            அழைக்கிறார்! அழைக்கிறார்
            நம்பிக்கையோடவர் சரணத்தை
            சேருவாய் தள்ள மாட்டார்

3.         தாமதமின்றி இந்நேரத்தினில்
            வந்திடுவாய்! வந்திடுவாய்!
            பாவமுமற உன் நெஞ்சத்தினில்
            வாழ்வையும் பெற்றிடுவாய்

4.         விரும்பி வருந்தி அழைக்கிறார்
            ஓடியே வா! ஓடியே வா!
            வந்திடுவோரைச் சந்தோஷிப்பிப்பார்
            உடனே உடனே வா!

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...