பாவம் பெருகுதே


பல்லவி

                   பாவம் பெருகுதே
                        பாரும் பரன் இயேசுவே
                        அழியும் மனுக்குலம்
                        அதையும் இரட்சிப்பீரே!

சரணங்கள்

1.         ஆத்துமா இரட்சிப்பிழந்தவர்
            ஆயிரம் ஆயிரமாய்
            அன்றாடகம் இந்த மண்ணடியில்
            அழிந்து சாகின்றாரே                            - பாவம்

2.         இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
            எச்சரிப்பை வெறுத்து
            இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
            இன்றும் கெட்டழிகின்றார்                     - பாவம்

3.         தானியேல் போல ஜெபித்திடும்
            தாசர் பலர் மறைந்தார்
            திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
            தூங்கிக் களைத்துப் போனார்                - பாவம்

4.         எமது காரியமாகவே
            யாரை அனுப்பிடுவேன்
            என்றவர் அழைக்கும் தூய சத்தம்
            என்னுள்ளம் தொனிக்குதே                    - பாவம்

5.         ஜீவனை வெறுத்துத் தியாகமாய்
            சேவையும் செய்திடுவேன்
            சேவைக்கு ஈடாக ஜனங்களை
            ஜீவ தேவன் தருவார்                             - பாவம்

6.         வெறுங்கையாய் பரலோகத்தில்
            வந்திடோம் இயேசு நாதா
            ஆத்துமா ஆதாயம் செய்திடவே
            ஆசீர் பொழிந்தனுப்பும்                         - பாவம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு