தேவ சாயல் ஆகா மாறி


பல்லவி

                    தேவ சாயல் ஆகா மாறி
                        தேவனோடிருப்பேன் நானும்

சரணங்கள்

1.         அந்த நாளும் நெருங்கிடுதே
            அதி விரைவாய் நிறைவேறுதே
            மண்ணின் சாயலை நான் களைந்தே - தம்
            விண்ணவர் சாயல் அடைவேன்                         - தேவ

2.         பூமியின் கூடாரம் என்றும்
            பெலவீனமே அழிந்திடுமே
            கைவேலையல்லாத பொன்வீடு
            கண்டடைந்து வாழ்ந்திடுவேன்                        - தேவ

3.         சோரும் உள்ளான மனிதன்
            சோதனையில் பெலனடைய
            ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன்
            ஆண்டவர் என்னோடிருப்பார்                            - தேவ

4.         ஆவியின் அச்சார மீந்தார்
            ஆயத்தமாய் சேர்ந்திடவே
            ஜீவனே எனது கிறிஸ்தேசு
            சாவு எந்தன் ஆதாயமே                                    - தேவ

5.         காத்திருந்து ஜெபிப்பதினால்
            கழுகுபோல பறந்தெழும்பி
            ஜீவ யாத்திரை ஓடி முடித்து
            ஜீவ கிரீடம் பெற்றிடுவேன்                                 - தேவ

6.         மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
            முகமுகமாய் தரிசித்திட
            வாஞ்சையாய் தவிக்கும் எனதுள்ளம்
            வாரும் என்று கூப்பிடுதே                                  - தேவ

7.         உன்னத சீயோன் மலைமேல்
            என் அருமை இயேசுவுடன்
            ஜெப வீட்டினி லகமகிழ்ந்திடுவேன் நான்
            ஜீவிப்பேனே நீடுழிவாய்                                     - தேவ

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு