திருக்கரத்தால் தாங்கி என்னை


          திருக்கரத்தால் தாங்கி என்னை
            திருச்சித்தம் போல் நடத்திடுமே
            குயவன் கையில் களிமண் நான்
            அனுதினமும் வனைந்திடுமே

1.         உம் வசனம் தியானிக்கையில்
            இதயமதில் ஆறுதலே
            காரிருளில் நடக்கையிலே
            தீபமாக வழி நடத்தும் (2)

2.         ஆழ் கடலில் அலைகளினால்
            அசையும்போது என் படகில்
            ஆத்ம நண்பர் இயேசு உண்டே
            சேர்ந்திடுவேன் அவர் சமூகம் (2)

3.         அவர் நமக்காய் ஜீவன் தந்து
            அளித்தனரே பெரிய மீட்பு
            கண்களினால் காண்கிறேனே
            இன்பக் கானான் தேசமதை (2)

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே