துதிசெய் மனமே நிதம் துதிசெய்


பல்லவி

          துதிசெய் மனமே நிதம் துதிசெய்
            துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
            இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

சரணங்கள்

1.         முன் கால மெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி
            வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே             - துதி

2.         ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
            எக பரன் உன் காவலனாய்யிருந்தாரே                           - துதி

3.         சோதனை பலவாய் மேகம் போல் உன்னை சூழ்ந்தாலும்
            சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை                    - துதி

4.         தாய் தந்தை தானும் ஏகமாய் உன்னை மறந்தாலும்
            தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே    - துதி

5.         சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
            சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே             - துதி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு