தேவனைத் துதிப்பதும்
பல்லவி
தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம்
பண்ணுகிறதும் - நல்லது
சரணங்கள்
1. எருசலேமைக்
கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட
இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் -
தேவனை
2. இருதயம்
நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர்
காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் -
தேவனை
3. நட்சத்திரங்களின்
இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய்
அவைகளை உச்சரித்தழைக்கிறார் -
தேவனை
4. ஆண்டவர்
பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில்
அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் -
தேவனை
5. சாந்தகுண
முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில்
துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் -
தேவனை
Comments
Post a Comment