08 June 2018

ஐயோ, கோ! நான் என்ன


291.                                                    (261)

பல்லவி

                   ஐயோ, கோ! நான் என்ன செய்வேன்
                   வியாகுலவாள் ஊடுருவுதே

1.         வையத்து மாய்கையினால்
            மாபாவஞ் செய்தேனையா தேவா           - ஐயோ

2.         தூயவா, உனைமறந்து
            தோஷத் துரோகஞ் செய்தேனே! தேவா - ஐயோ

3.         கண்ணினால் கண்ட பாவம்
            கணக்கிலடங்காதே, தேவா                  - ஐயோ

4.         வாயினால் சொன்ன பாவம்
            எண்ணத்தொலையாதே, தேவா            - ஐயோ

5.         ஏசுக்கிறிஸ்தரசே
            ஏழைப்பாவிக் கிரங்காய், தேவா             - ஐயோ

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...