வண்டி நல்ல வண்டி இது
290. இராகம், தெம்மாங்கு (248)
1. வண்டி நல்ல
வண்டி இது அன்னமே
வர்ணமிட்ட சூட்ச வண்டி அன்னமே
எண்டிசையும் புகழும் வண்டி அன்னமே
ஏசுதச்சன் செய்த வண்டி அன்னமே
2. ஒன்பது ஜன்னல்களாம் அன்னமே
உள்ளரங்க மெத்தவுண்டாம் அன்னமே
முன்னோடும் பின்னோடுமாம் அன்னமே
மூவருட சாயல் வண்டி அன்னமே
3. காற்றாலே ஓடுதுபார் அன்னமே
கண்ட கண்ட தேசமெல்லாம் அன்னமே
கூற்றன் வந்தால் ஓட்டமில்லை அன்னமே
கோலமிட்ட சித்ரவண்டி அன்னமே
4. உருளை இரண்டு சேர்ந்த வண்டி அன்னமே
ஒரு நொடிக்குள் சாயும் வண்டி அன்னமே
ஒருவன் வரும் கூலி வண்டி அன்னமே
உடையவனுக்கேற்ற வண்டி அன்னமே
5. பட்டுப்பணியுடனே அன்னமே
பலசரக்குமுள்ள வண்டி அன்னமே
கட்டுமுட்டாய் உள்ள வண்டி அன்னமே
கங்காளஞ் சேர்ந்த வண்டி அன்னமே
6. பாதை தெரியாமலே அன்னமே
பக்கமாய் ஓடுதடி அன்னமே
தீதை அறியாமலே அன்னமே
திண்டுமுண்டாய் ஓடுதடி அன்னமே
7. நேராம் நெருக்கு வழி அன்னமே
நீ தெரிந்து கொள்ளடியே அன்னமே
பாராயோ சத்ய வழி அன்னமே
பாதை நல்ல பாதை இது அன்னமே
8. சற்றே குடங்கிவிட்டால் அன்னமே
சாற்றிவைக்கும் வண்டி இது அன்னமே
சற்குணன் பாடும் வண்டி அன்னமே
சங்கீதப் பெட்டி வண்டி அன்னமே
Comments
Post a Comment