வாது செய்யாதே சீயோன் மாது


292. இராகம் (தேவா இவ் வீட்டில் இன்றே)          (271)

பல்லவி

                   வாது செய்யாதே சீயோன் மாது மயக்கமேது
                   கூடிவந்தால் நலமிப்போது

1.         ஆதி மனுடர் செய்த தீதின் பெருந்துரோகம்
            அந்தகார வல்லமை போக
            மாதுவித்தினில் நரனாக பிறந்து சாக
            வந்தேனுற்சாகமாக - புவி
            மைந்தர் சந்ததி வாழ்க இனி சந்தேகமோ ஓ ஓ
            ஓதாயெனது மொழி சூதாய் பிரிய சிநேக அதி உத்தமி என்னுடன் வாழ்க

2.         கோடாகோடி தூதர்கள் கூடி நடனமாடி
            கொண்டாடிச் சங்கீதம்பாடி
            நிதநீடிய காயமதை முடியடர்ந்து சாடி நித்திய கிரீடம் சூடி
            குதித்தானந்தமானாரே அறிவானந்தமானாரே
            பேடே மயிலன்னமே நாடும் புறாவன்னமே சற்று கூடி எழுந்தவாவே

3.         ஆட்டம் பரமசேனை கூட்டத்திருந்து நானே
            கன அற்புத அற்புதந்தானே
            ஒரு மாட்டுக்கொட்டிலில் பிறந்தானெ கானகத்திலங்கு முன்னே
            என்னாட்டத்துக்குரிய மானே கொண்டாட்டத்துக்குரிய தேனே
            பாட்டுக்கும் யூதர் குற்றச் சாட்டுக்கும் உங்கள் திருப்பாட்டுக்கும் குமாரனே
            ஏனை மீட்டு ரட்சித்தகோனே

4.         அந்தத்தினில் சிறந்த விந்தை சீயோன் குமாரி
            அழகான நடைச் சிங்காரி
            சந்திரவதனமதில் சுந்தரமிலங்கொய்யாரி - தரும
            சற்குணமென் பாரி உனைச் சந்தித்தேன் அனுசாரி
            எந்தவிதமுமுன்னை நந்த மணம் புரிய சிந்தினேனே என் சோரி
            பெருஞ் சொல்லை அனுசாரிகரி சந்த நெல்லையா னொப்பாரி  

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு