27 June 2018

சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே


பல்லவி

          சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே - அவர்
            நான் என்றும் நம்பும் கன்மலை

சரணங்கள்

1.         கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
            கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
            அசையா என் நம்பிக்கை நங்கூரமே
            இயேசுவில் மாத்திரமே                         - சீயோ

2.         புயலடித்தாலும் அலை மோதினாலும்
            எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
            எனக்கு எட்டாத உயரத்திலே
            எடுத்தவர் நிறுத்திடுவார்                                  - சீயோ

3.         வியாதியினாலே காயம் வருந்தி
            வாடியே மரண நிழல் சூழினும்
            விசுவாசத்தின் கரத்தாலவர்
            வாக்கை நான் பற்றிடுவேன்                               - சீயோ

4.         மாபரிசுத்த விசுவாசத்தாலே
            மாபரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
            திரை வழியாம் தன் சரீரத்தினால்
            திறந்தாரே தூய வழி                                         - சீயோ

5.         நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
            என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில்
            முடிவுவரை நடத்திடுவார்
            முற்றுமாய் இரட்சிப்பாரே                                   - சீயோ

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...