28 June 2018

இயேசு என்னும் இனிய நாமம்


பல்லவி

                   இயேசு என்னும் இனிய நாமம்
                        இந்தக் காசினியோர் அறிய நாமும்
                        சுவிசேஷத்தைப் பாரினிலே காட்டுவோம்
                        விசுவாசமதை நாட்டில் நிலை நாட்டுவோம்

சரணங்கள்

1.         பாவத்தைப் போக்க சாபதா்தை நீக்க
            பக்தராய் வந்தார், பரிசுத்தராய் வந்தார்             - இயேசு

2.         நிந்தை சுமந்து கந்தை அணிந்து
            விந்தையாகவே அவர் சொந்தமாய் வந்தார்      - இயேசு

3.         ஆதிபன் மேன்மை அத்தனையும் வெறுத்து
            ஆயர் அறிய அவர் ஆகுடில் வந்தார்                - இயேசு

4.         மாட்சி கெடாத மாது மரியின்
            பாலனாய் வந்தார் அனு கூலனாய் வந்தார்         - இயேசு

5.         வேதாளப் பேயைப் பாதாளம் வரையில்
            ஒழிக்க வந்தார் அதை அழிக்க வந்தார்           - இயேசு

6.         பரிசுத்தவான்கள் பருகிக் கழிக்க
            இகத்தில் வந்தார் அவர் அகத்தில் வந்தார்     - இயேசு

7.         வாதை நோய் துன்பம் யாவையும் நீக்க
            கர்த்தராய் வந்தார் தம்மைத் தத்தமாய்த் தந்தார்          - இயேசு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...