எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
பல்லவி
எங்கே
சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே
சுமந்து போகிறீர்?
சரணங்கள்
1. எங்கே
சுமந்து போறீர்? இந்தக் கானலில் உம
தங்க
முழுவதும் நோக, ஐயா, என் ஏசு நாதா - எங்கே
2. தோளில்
பாரம் அழுத்த, தூக்கப் பெலமில்லாமல்
தாளும்
தத்தளிக்கவே, தாப சோபம் உற நீர் - எங்கே
3. வாதையினால்
உடலும் வாடித் தவிப்புண்டாக,
பேதம்
இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர -
எங்கே
4. தாயார்
அழுதுவர சார்ந்தவர் பின்தொடர
மாயம்
இல்லாத ஞான மாதர் புலம்பி வர -
எங்கே
5. வல்லபேயைக்
கொல்லவும், மரணந்தனை வெல்லவும்
எல்லை
இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் -
எங்கே
6. மாசணுகாத
சத்திய வாசகனே, உமது
தாசர்களைக்
காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து - எங்கே
Comments
Post a Comment