என்ன தியாகம்! என் கல்வாரி நாயகா!


பல்லவி

                   என்ன தியாகம்! என் கல்வாரி நாயகா!
                        என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ

சரணங்கள்

1.         விண் தூதர் போற்றிடும் உம் பிதாவையும்
            விட்டிறங்கி வந்தீரே
            மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரைய்யா!
            மானிடர் மேல் அன்பினால்                    - என்ன

2.         ஜெனித்த நான் முதலாய் - கல்வாரியில்
            ஜீவனையும் ஈயும் வரை
            பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா
            பாவியை மீட்பதற்காய்                          - என்ன

3.         தலையைச் சாய்த்திடவோ - உமக்கு ஓர்
            தலமோ எங்குமில்லை
            உம் அடிச் சுவட்டில் நான் செல்லவோ
            முன் பாதை காட்டினீரே                       - என்ன

4.         தாய் தந்தை வீடு நாடும் - இன்னும்
            தனக்குள்ளதெல்லாம் வெறுத்து
            அனுதினமும் குருசைச் சுமப்பவரல்லோ
            அப்போஸ்தலர் என்றீரே                        - என்ன

5.         பாடுகளல்லவோ உம்மை - மகிமையில்
            பூரணமாய்ச் சேர்த்ததே
            உம்மோடு நானும் பாடு சகிப்பேன்
            என் ஜீவனையும் வைத்தே                    - என்ன

6.         இன்பம் எனக்கனியேன் - என் அருமை
            இயேசுதான் என் பங்கல்லோ!
            நேசரின் பின்னே போகத்துணிந்தேன்
            பாசம் என்னில் வைத்ததால்                  - என்ன

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு