கிருபையிதே தேவ கிருபையிதே


                   கிருபையிதே தேவ கிருபையிதே
                        தாங்கி நடத்தியதே
                        இயேசுவிலே பொன் நேசரிலே
                        அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

1.         ஆருயிர் அன்பராய் எங்களுடனே
            ஜீவிய பாதையிலே - இயேசுபரன்
            அனுதினமும் வழி நடந்தே
            அவரது நாமத்தில் காத்தனரே              - கிருபையிதே

2.         எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
            மகிமை சேர்ந்தனரே - பூரணமாய்
            காத்தனரே கர்த்தர் எமை
            கருணையினால் தூய சேவை செய்ய     - கிருபையிதே

3.         அன்பின் அகலமும் நீளம் உயரமும்
            ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார்
            கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
            சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய்         - கிருபையிதே

4.         நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
            நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே
            விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
            அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம்           - கிருபையிதே

5.         ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
            வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர்
            சீயோனே நீ பார் உனக்காய்
            நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார்                 - கிருபையிதே

6.         வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
            வியாதியும் வேதனையும் - வைத்தியராய்
            இயேசுவல்லால் சார்ந்திடவோ
            இகமதில் வேறெமக் காருமில்லை                     - கிருபையிதே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு