இந்தக் குழந்தையை நீர்


பல்லவி

          இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும் கர்த்தாவே

அனுபல்லவி

            உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த - இந்த

சரணங்கள்

1.         பிள்ளைகள் எனக்கதிகப் பிரியம் வரலாம் என்று
            உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே                   - இந்த

2.         பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த
            சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும் ஐயா                - இந்த

3.         உமக்கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்
            உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து        - இந்த

4.         உலகமும் பேய்ப் பிசாசும் ஒன்றும் தீது செய்யாமல்
            நலமாய் இதைக் காத்தாளும் நன்மை பராபரனே           - இந்த

5.         விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்
            பசிய மரம் போல் தெய்வ பக்தியிலே வளர                      - இந்த

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு