மங்கள கீதங்கள் பாடிடுவோம்
1. மங்கள கீதங்கள்
பாடிடுவோம்
மணவாளன் இயேசு மனமகிழ
கரைதிறை நீக்கி திருச்சபையாக்கி
கர்த்தனர் கற்புள்ள கன்னிகையாய்
பல்லவி
கோத்திரமே யூதா கூட்டமே
தோத்திரமே துதி சாற்றிடுவோம்
புழுதியின் றெம்மை உயர்த்தினாரே
புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம்
2. இராஜா குமாரத்தி ஸ்தானத்திலே
இராஜாதி ராஜன் இயேசுவோடே
இனஜன நாடு தகப்பனின் வீடு
இன்பம் மறந்து நாம் சென்றிடுவோம் - கோத்
3. சித்திர தையலுடை அணிந்தே
சிறந்த உள்ளமான மகிமையிலே
பழுதொன்றுமில்லா பரிசுத்தமான
பாவைகளாகப் பறந்திடுவோம் - கோத்
4. ஆரங்கள் பூட்டி அலங்கரித்தே
அவர் மணவாட்டி ஆக்கினாரே
விருந்தறை நேசர் கோடி ஒளி வீச
வீற்றிருப்போம் சிங்காசனத்தில் - கோத்
5. தந்தத்தினால் செய்த மாளிகையில்
தயாபரன் ஏசு புறப்படுவார்
மகிழ் கமழ் வீச மகத்துவ நேசர்
மன்னன் மணாளன் வந்திடுவார் - கோத்
Comments
Post a Comment