27 June 2018

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்


          எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
            கண்களை ஏறெடுப்பேன்

பல்லவி

1.         வானமும் பூமியும் படைத்த
            வல்ல தேவனிடமிருந்து
            எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
            என் கண்கள் ஏறெடுப்பேன்                     - எனக்

2.         மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
            நிலைமாறி புவியகன்றிடினும்
            மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
            ஆறுதல் எனக்கவரே                             - எனக்

3.         என் காலைத் தள்ளாட வொட்டார்
            என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
            இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
            இராப்பகல் உறங்காரே                          - எனக்

4.         வலப்பக்கத்தில் நிழல் அவரே
            வழுவாமல் காப்பவர் அவரே
            சூரியன் பகலில் சந்திரன் இரவில்
            சேதப்படுத்தாதே                                  - எனக்

5.         எத்தீங்கும் என்னை அணுகாமல்
            ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
            போக்கையும் வரத்தையும் பத்திரமாக
            காப்பாரே இது முதலாய்            - எனக்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...